கொசுவச் சட்டையின்(டி ஷர்ட்) கழுத்துப்பட்டை ஊதா நிறத்தில் இருக்க வேண்டும். இரு கைகளிலும், பாக்கெட்டிலும் ஊதா நிறக் கால்பந்து வரைந்திருக்க வேண்டும். மேல்பகுதியில் வெள்ளை நிறம் பிரதானமாக தொடங்க, கீழே இறங்க இறங்க, வெளிர் மஞ்சள் நிறத்தில் முடிய வேண்டும்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையொட்டிய ஆடைத் தொழிற்சாலைக்கு வந்திருக்கும் அமைவி (order) இது. எப்படியும் இரு வாரங்களில் சட்டை தயாராகிவிடும். தானியங்கி மயமான இதன் உரிமையாளர், வே வாங். தைவானிலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இத்தொழிலை நடத்தி வருகிறார். “இங்கு மொத்தம் தொண்ணூறு மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன,” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் வாங். நிஜமாகவே அங்கிருக்கும் ஒவ்வொரு இயந்திரத்தின் விலையும் அவ்வளவு தேறும். என்ன செய்வது..? இப்படித் தனித்துவமான ஆடைகள் தயாரித்தால் தான், சீனா ஆட்சிசெய்யும் இத்துறையில் பிழைப்பு நடத்த முடியும்?
Add Comment