தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என மூன்று அணிகளும் இணைந்து தமிழ்நாடு தழுவிய உண்ணா நிலைப் போராட்டத்தை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். தி.மு.க.வின் முன்னெடுப்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்படும். அந்தப் போராட்டங்கள் மூலமாக நீட் ஒழிக்கப்பட்டது, அதற்குக் காரணமானவர் உதயநிதி என்ற பெயர் வரும் எனச் சொல்லி இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இளைஞர் அணியின் செயலாளர், இளைஞர் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment