66. கடிதங்களில் உலகம்
1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார்.
அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன் ஜெயிலுக்கு மாற்றினார்கள். 1933 ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதிவரை அவர் அங்கே இருந்தார்.
24-ஆம் தேதி மீண்டும் நைனி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 600 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பிறகு ஆகஸ்ட் 30-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பொதுவாக ஜவஹர்லால் நேரு, தனது சிறைவாசக் காலத்தில் ஏராளமான புத்தகங்களைப் படிப்பதற்கு நேரம் செலவிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை நைனி சிறையில் இருந்த நாட்களில் அவர் எழுதுவதற்கு நேரம் செலவழித்தார்.
என்ன எழுதினார் தெரியுமா? கடிதங்கள்! யாருக்கு? தன் மகள் இந்திராவுக்கு!
Add Comment