“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள சிற்பங்களைப் பார்த்த பலர், அதேபோன்று சிலைகளையும் வேலைப்பாடுகளையும் செய்துதர வேண்டும் என எங்களைத் தொடர்பு கொள்ள, இதையே எங்கள் முழுமூச்சான தொழிலாக ஏற்றுக்கொண்டு விட்டோம்” என்கிறார் தம்மம்பட்டி சி.சீனிவாசன்.
இவரது தந்தை ஆர்.சந்திரன். ரிஷிகேஷில் உள்ள சிவானந்த ஆசிரமத்தின் பிரதான நிலைக்கதவு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இவரால் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
“எங்களுக்கு வேற என்ன தம்பி தெரியும்? சிற்பின்னு சொல்றது ஒரு பெருமை இல்லையா.! எல்லாரும் இந்த வேலை செய்யமுடியுமா சொல்லுங்க” என்கிறார்.
Add Comment