தகவல் தொழிநுட்பம் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தி வருகிறது. அவ்வாறிருக்கையில் விவசாயம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? சொல்லப்போனால் சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தால் பெரும் பலன் அடைந்துள்ள துறைகளில் ஒன்று விவசாயம்.
அதிலும் மிகவேகமாய் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கும் பயனளிக்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் முதன்மையான குறிக்கோள்கள் இரண்டு. விளைச்சலை அதிகப்படுத்துதல். அதேவேளையில் உற்பத்திச் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தல். இவ்விரண்டு குறிக்கோள்களையும் அடைந்திட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் வல்லமை கொண்டது.
Add Comment