சந்திரனின் தென் துருவத்தைத் தொட்டாயிற்று. அந்தத் திக்திக் நிமிடங்களையும் அதனைத் தொடர்ந்த பரவசத்தையும் மானிட குலமாக நின்று அனுபவித்தாயிற்று. அடுத்தது என்ன..? தரையிறங்கிய விக்ரம் இப்போது என்ன செய்கிறது? பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் தேடி விடுவோம்.
இந்த சவாரியின் தலையாய நோக்கம், ஒரு நாடாக, பூமிக்கு வெளியில் இருக்கும் ஒரு வேற்றுப் பரப்பில் மென் தரையிறக்கம் செய்யும் வல்லமை இருக்கிறதா என்பதைப் பரிசீலிப்பது. அது நிச்சயம் மிக வினைத்திறனாக நிறைவேறியது!
உள்நாட்டு உற்பத்திப் பொருட்களும், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களும் ஒன்றிணைந்து, எடுத்த காரியத்தை முடித்துக் கொடுத்தன. ஏனைய நாடுகளின் லூனா மிஷன்களை விட மிகக் குறைந்த செலவில் இந்தப் பயணம் அமைந்தது, அதிசிறப்பான அம்சம். இதில், எண்ணற்ற அறிவாளிகளின் தன்னலமற்ற உழைப்பு பிரதானப் பாகம் வகிக்கிறது.
Add Comment