Home » ஜிம்பாப்வே பொதுத்தேர்தல்: அதிபர் வென்றார்; நாடு தோற்றது!
உலகம்

ஜிம்பாப்வே பொதுத்தேர்தல்: அதிபர் வென்றார்; நாடு தோற்றது!

உலகத்தில் மனிதர்கள் வாழப் பொருத்தமற்ற நாடுகளின் அணிவரிசையில் எப்போதுமே முன்னணி முத்தண்ணாவாக உட்கார்ந்திருக்கும் ஸிம்பாப்வேயில் சென்ற வாரம் அதிபர் தேர்தல் நடந்தது. முடிவு ஒன்றும் பிரமாதமில்லை. கடந்த நான்கு தசாப்தங்களாகத் தோல்வியடைந்த தேசத்துக்குரிய அவல லட்சணங்களில் ஒன்றுதான் பெருபேறுகளும். கடந்த நாற்பத்தி மூன்று வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ‘ZANU – PF’ கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருக்க, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானி போல ‘வெற்றி, வெற்றி’ என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார் அதிபர் எமர்ஸன் மெனன்கவா.

26-ம் தேதி சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் இருமுனைப் போட்டியாய் வந்து கொண்டிருந்த போது அதிபர் மெனன்க்வா இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டி வரும் என்ற நிலையே இருந்தது. ஆனால் திடீரென்று முடிவுகள் வருவது தாமதமானது. நம் நாட்டில் ஏற்படுவது போல மின்சாரத் தடை ஏற்பட்டு மானிட்டர் ஆஃப் ஆகுவது போல தொழில்நுட்பக் கோளாறு அல்ல. சிஸ்டத்தில் கோளாறு. பத்து மணித்தியாலங்களாய்த் தேர்தல் திணைக்களத்திடமிருந்து எந்தப் பேச்சு மூச்சுமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ‘நெல்சன் காமிஸா’ வரப் போகும் முடிவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். அதிபர் மெனன்கா திரைக்கதை வசனம் எழுதி, காட்சியைப் படம் வரைந்து குறித்த பின்னர் தேர்தல் திணைக்களத் தலைவர் சூட்டிங் வந்தார். மெனன்க்வா ஐம்பத்திரண்டு சதவீதத்தால் வழக்கம் போல வெற்றி பெற்று இருப்பதாக அறிவித்துவிட்டுச் சென்றார். ‘அச்சுறுத்தல்களும்,கடத்தல்களும், போலிஸ் அடாவடிகளும் மலிந்து போன படு அராஜகமான தேர்தல்’ என்று தேர்தலைக் கண்காணிக்க வந்திருந்த சர்வதேச நாடுகளின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகளும் சான்றிதழ் வழங்கி இருக்க, அதிபர் மெனன்க்வாவோ ‘உன் கவலை யாருக்கு வேண்டும்’ என்று எகத்தாளமாய் இருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!