ஆப்கானிஸ்தான் என்றால் உள்நாட்டுப் போரும் தாலிபன் இயக்கமும்தான் பொதுவாக நினைவுக்கு வருபவை.
ஆனால் இந்த நாடு இயற்கை வளங்கள் அதிகமுள்ள ஒரு நாடு என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. செம்பு, லிதியம் போன்ற உலோகப் பொருட்களும், இரத்தினக் கற்களும் ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களில் முக்கியமானவை. பாஞ்ஷிர் மாகாணமும் அதனருகில் உள்ள நூரிஸ்தான் மாகாணமும் இரத்தினக் கற்கள் வளத்தைக் கொண்ட மாகாணங்கள். மலைகளைக் குடைந்து இரத்தினக் கற்கள் எடுப்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல. அத்துடன் ஆப்கானிஸ்தானின் இரத்தினக் கற்கள் சுரங்கங்கள் இருக்கும் பகுதிகள் இலகுவான போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற மலைப் பிரதேசங்களாகும்.
ஆபரணங்களில் மிளிரும் இரத்தினக் கற்களைத் தோண்டி எடுப்பதற்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பிரதேசங்களில் சுரங்கத் தொழிலாளிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை அக்கற்களை அணியும் யாரும் சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்புக் குறைவு.
Add Comment