ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW), இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) அங்கீகாரத்தை இடை நிறுத்தம் செய்திருக்கிறது . இந்தியா சார்பாகப் பங்கேற்று வெற்றி பெற்று, மூவர்ணக் கொடியை ஏந்தி வலம் வருவதே விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவு. தங்கள் உடலை வருத்திப் பல வருடங்கள் உழைப்பது அதற்குத்தான். வென்றாலும் இப்போது நம் வீரர்கள் அதைச் செய்ய முடியாது. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ப்ரிஜ் பூஷன் தன் பதவியை விட்டு விலகாமல், தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தியதுதான் காரணம்.
இந்த மாதம் நடந்த U-20 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதன் முறையாக வென்று சாதனை படைத்தது. இதனால் கிடைத்த புள்ளிகளுக்கும் தற்போது மதிப்பில்லை. ஏனெனில் போர் நடத்தும் ரஷ்யாவின் விளையாட்டு வீரர்களைப் போல, தேர்தல் நடத்த இயலாத இந்தியாவின் வீரர்களும் நடுநிலை வீரர்களாகத்தான் போட்டியில் பங்கேற்பார்கள். இதன் நடைமுறைச் சிக்கல்கள் வீரர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.
Add Comment