Home » சிங்கப்பூரின் புதிய அதிபர்: திறமைக்கு மரியாதை!
உலகம்

சிங்கப்பூரின் புதிய அதிபர்: திறமைக்கு மரியாதை!

தர்மன் சண்முக இரத்தினம்

தமிழர் ஒருவர் சிங்கப்பூரின் புதிய அதிபராகியிருக்கிறார். தர்மன் சண்முக இரத்தினம். லீ க்வான் யூவைத் தவிர சிங்கப்பூரில் வேறெந்தத் தலைவரையும் அறியாததொரு தலைமுறை இங்குண்டு. அவர்களுக்கு இக்கட்டுரை பயன்படும்.

சிங்கப்பூர், ஆசியாவில் ஒரு அதிசயம். சின்னஞ்சிறியதாக, சென்னை நகரின் பரப்பளவை விடவும் சிறிது குறைந்த நகரநாடுதான் சிங்கை. ஆனால் உலக அளவில், ஆசியாவின் பொருளாதார, அரசியல் நகர்வுகள் தொடர்பாக மேற்குலகின் முக்கியத்தர்களுக்கு ஏதாவது கருத்துகள் தேவைப்பட்டால், ஆலோசனை தேவைப்பட்டால் அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காலஞ்சென்ற சிங்கையின் பிரதமர் லீ க்வான் யூ. 1957’ல் சிங்கையின் முதல்வராகவும், 1965 முதல் விடுதலை பெற்ற நாடான சிங்கையின் முதல் பிரதமராகவும் இருந்து, சிங்கையை ஒரு பெரும் அதிசயமாகக் கட்டி எழுப்பியவர் அந்த மாபெரும் தலைவர்.

பிரித்தானிய பிரதமர் தாட்சர், லீ அவர்களின் மறைவின் போது, ‘லீ தன் அரசியல் வாழ்வில் ஒருபோதும் எந்தச் சறுக்கலையுமே சந்தித்திராத மாபெரும் தலைவர்’ என்று புகழாரம் சூட்டிய அளவுக்குப் புத்திசாலி லீ.  அவர், 1990’ஆம் ஆண்டு தனது நெடிய முப்பதாண்டு கால பிரதமர் பதவியிலிருந்து விலகி, கோ சோ தோங்கை அடுத்த பிரதமராகத் தெரிவு செய்து வளர்த்தெடுத்தார். அதே சமயத்தில் 1991’இல் சிங்கையின் அதிபருக்கு உரிய அதிகாரங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து அதிபருக்கு சிங்கையின் நிதி மேலாண்மைகளில் அதிக அதிகாரம் வருமாறு அரசமைப்புத் திட்டம் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட விதிகளின் படி சிங்கையின் பிரதமர் மற்றும் அமைச்சரவை நினைத்தால் கூட, அந்த நேரத்தில் அரசுக்கு இருக்கும் உபரி வருமானத்தைப் பயன்படுத்த முடியுமேயொழிய, சிங்கையின் சேர்த்து வைக்கப்பட்ட பழைய சொத்து நிதிகளில் இருந்து பணத்தை எடுத்துப் பயன்படுத்த முடியாது; அப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு விரும்பினால் சிங்கையின் அதிபர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; மற்றும் சிங்கையின் உயரிய ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்பான சிபிஐபி (ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பு)யுடன் இணைந்து எவர் மீதும் விசாரணையை மேற்கொள்ளச் சொல்ல அதிபருக்கு அதிகாரம் உண்டு; அந்த அதிகாரம் பிரதமர் அந்த விசாரணைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும்  செல்லுபடியாகக் கூடியது என்பதுதான் கருதிப் பார்க்க வேண்டியது; இத்தகைய உயரிய அதிகாரங்கள் அதிபர் பொறுப்புக்குக் கிடைக்குமாறு 1991’இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!