Home » மதுரையில் ஒரு சேப்பாக்கம்
விளையாட்டு

மதுரையில் ஒரு சேப்பாக்கம்

‘சினிமாவையும் சித்திரைத் திருவிழாவையும் விட்டால் மதுரை மக்களுக்கென்று பொழுதுபோக்கு எதுவும் பெரிதாக இல்லை. கிரிக்கெட் மதுரை மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. ஆனால் கிரிக்கெட்டிற்கு என்று ஒரு தரமான ஸ்டேடியம் மதுரையில் இல்லை என்ற குறை மதுரை மக்களுக்கு உண்டு. அதைத் தீர்க்கவும் மதுரையின் சேப்பாக்கமாக இது இருக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும்தான் இந்த விளையாட்டரங்கத்தை அமைத்துக் கொண்டு இருக்கிறோம்’ என்றார் வேலம்மாள் அறக்கட்டளைத் தலைவரும் வேலம்மாள் கல்விக் குழுமங்களின் சேர்மனுமான எம்.வி.முத்துராமலிங்கம். இவரது வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில்தான் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறது.

அவரிடம் தொடர்ந்து பேசினோம். ‘சொந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்பொழுதும் இருக்கிறது. அந்த நோக்கத்தில் வந்ததுதான் இந்த மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும். தரமான வசதி, குறைந்த செலவு, நிறைவான சேவை இதுவே எங்கள் குழுமத்தின் வெற்றிக்கான மந்திரம். மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான கிரிக்கெட் மைதானம் உலகத்தரத்தில் அமைய வேண்டும். சிறிய பெரிய லீக் போட்டிகளிலிருந்து ஐ.பி.எல். வரை நடத்தக்கூடிய வசதிகளுடன் அது அமைய வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!