பதிநான்காயிரம் கோடிகள்.
தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்ட தொகை இது.
ஏழைகள் நிறைந்த மத்திய வருவாய் நாடு எசுவாடினி. வளரும் நாடுகளோ அல்லது வளர்ந்த நாடுகளோ இப்படிப் பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெயர் மாற்றம் குறித்து பேசியதும் ஜி20 அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆஃப் பாரத் என்று அச்சிடப்பட்டதும் நல்ல மீம் கன்டெண்டாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. வடக்கில் பிரபலங்கள் மத்தியில் இதற்கு பலத்த ஆதரவு இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் அனுராக் பெயர் மாற்றம் வதந்தி என மறுத்துள்ளார். பி.ஜே.பி.யின் வழக்கமான ஆழம் பார்க்கும் உத்தியாகவும் இது இருக்கலாம்.
பைசா பிரயோஜனம் இல்லாத பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைத்து வரிசையில் நின்று உயிரை விட்டு தேசபக்தியை நிரூபித்தோம். மெஜாரிட்டி எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் பா.ஜ.க., தானோஸ் மாதிரி எந்நேரம் வேண்டுமானாலும் சொடக்கு போட்டு எதையும் மாற்றக்கூடிய ஆட்சி. அடுத்து எங்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டி வரலாம் என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான்.
Add Comment