Home » ஆபீஸ் – 67
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 67

67 உலகம் தெரியவில்லை

சாரு நிவேதிதா என்கிற பெயரைக் கேட்டாலே நவீன இலக்கிய உலகில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதும் அவனை இவனுக்குப் பிடித்துப்போக ஒரு காரணமாக இருந்திருக்கவேண்டும். இவனைவிடவும் குள்ளமாக – தனக்கு அடக்கமாக அமைவாக இருக்கவேண்டும் என்று எடை உயரம் என சகலத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்த BSA SLR சைக்கிளைப் போல சாரு நிவேதிதா இருந்தது இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம். யாரையுமே ஏற்காமல் எல்லோரையும் எடுத்தெரிந்து பேசும், தீவிர கம்யூனிஸ்ட்டைப்போல அதீதமாய் காட்டிக்கொள்ளுபவனாக இருந்தாலும் அவனுக்கு இவனுடைய கதைகள் பிடித்திருந்தன என்பதே எல்லாவற்றையும்விட அவனைப் பிடித்துப் போவதற்கான முக்கியமான காரணமாக இருந்தது என்பதே உண்மை.

அவன் பார்த்தவரை இலக்கியத்தில் அநேகமாக எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். நீ என்னவாக வேண்டுமானாலும் இரு. எவ்வளவு மட்டமாக நடந்துகொள்கிறவனாகவும் இருந்துவிட்டுப்போ. என் எழுத்து உனக்குப் பிடிக்கிறதா; உயர்வாகப் படுகிறதா அதுபோதும் நான் உன்னை ஏற்றுக்கொள்ள என்று, அவன் பாராட்டுவதெல்லாம் ஒரு பொருட்டா என்பதைப்போல வெளியில் அலட்சியமாக் காட்டிக்கொண்டாலும் உள்ளூர கிளுகிளுத்துக்கொண்டு எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள்.

எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் யாரும் யாருடைய எழுத்தையும் பொதுவில் பாராட்டிவிடப்போவதில்லை என்பதால் தன்னைப் பாராட்டுபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுடைய ரசனை இம்மியளவும் தன் ருசியுடன் ஒத்துப்போகாததாக இருந்தாலும் தன் எழுத்தைப் பாராட்டுகிறான் என்கிற ஒரே காரணத்துக்காக யாரும் யாரையும் மனதளவில் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தார்கள் – குறைந்தபட்சம் தன்னைப்பற்றித் தவறாகப் பேசியதாகத் தன் காதுக்கு வராதவரை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!