புலன்களின் மூலம் நாம் உலகை உணர்கிறோம். நாம் காணும் உலகம், புலன்களிலிருந்து பெறும் தகவல்களைக் கொண்டு நமது மூளை உருவாக்கும் ஒரு பிம்பம். வேறொரு விலங்குக்கு இதே உலகம் பிரிதொன்றாய்த் தெரியலாம். அது அவ்விலங்குக்கான ரியாலிட்டி.
மனித குலம் தோன்றிய காலம் தொட்டே, தன் அகக்கண்ணில் விரியும் ஒன்றை வெளியுலகுக்குக் கொண்டுவர முயன்று கொண்டேதான் இருக்கின்றான். ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் இவ்வாறான ஒரு முயற்சியே.
தான் கண்ட பெருவிலங்குகளை, தன்னை அச்சுறுத்தும் கற்பனை வடிவங்களை, தன்னை மீறிய சக்தி என்று அவன் உணர்ந்தவற்றையெல்லாம் கோட்டோவியங்களாகத் தீட்டியுள்ளான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான குகை ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன.
எங்களின் சுஜாதா என்ற பட்டத்தினை உங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் சார்.அருமை.