அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே வாக்காளராகவும் பதிவு செய்துகொள்ள முடியும். விருப்பப்பட்டால் எந்தக் கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பதையும்கூடப் பதிவு செய்து கொள்ளலாம். ஓட்டுநர் உரிமம் என்பது வெறும் கார் ஓட்டுவதற்கான அனுமதி மட்டும் அல்ல, அது வானில் பறந்து செல்லும் பறவைக்கான இறக்கைகள் போன்றது. அளப்பரிய சுதந்திரத்திற்கான நுழைவாயில். அந்த நேரத்தில் சர்வ சக்தி படைத்த வாக்காளராகப் பதிவு செய்வதும் முக்கியமல்லவா?
ஒரு தேர்ந்த சமையற்காரருக்கு, பிடித்தமான உணவுவகைகளைச் சொல்லி, அவை சமைத்துப் பரிமாறப்படும்போது மகிழ்வுடன் உண்ணும் வாடிக்கையாளர் இல்லையெனில் அவரது சமையற்கலையால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை. அதேபோல, மக்களாட்சியில் வேட்பாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் வாக்காளர்கள். வாக்களிக்கும் உரிமை என்பது மிகப்பெரிய சக்தி!
Add Comment