மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்றார். இந்தப் பயணத்தின் நடுவே துபாய் விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிபர் ரணில் விகரமசிங்கேவை சந்தித்தார்.
இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான் ஹைலைட். கொல்கத்தாவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க ரணில் விக்ரமசிங்கேவிற்கு அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி. பதிலுக்கு இலங்கைக்கு வரவேண்டும் என ரணிலும் அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெறச் சென்ற அவருக்கு இலங்கை அதிபரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது எதேச்சையானது என்பதை நம்புவோம். அதேசமயம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு இலங்கை அதிபரின் பங்கேற்பு எப்படிப் பயன் தரும் என்றக் கேள்வியையும் தவிர்ப்பதற்கில்லை. வெளிநாட்டில் தொழில் முனைப்பில் ஈடுபடும் அளவிற்கு இலங்கைப் பொருளாதாரம் இல்லை என்பதை உலகறியும்.
Add Comment