மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் இந்தப் பெயரை பெற்றது. ஆனால் இப்போது எல்லாப் பருவங்களிலும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது என்கின்றார், வாலண்டியர் ஹெல்த் சர்வீசஸ் (VHS) பல்நோக்கு மருத்துவமனையின் கண் டாக்டரான இந்துமதி ஸ்ரீதர்.
அடிப்படையில் இது கண்களில் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோய். இதை Conjunctivitis (இமைப் படல அழற்சி நோய்) என்றும் சொல்லலாம் Keratitis (விழிப் பாவை அழற்சி நோய்) என்றும் சொல்லலாம். பாதிக்கப்பட்ட நிறைய நோயாளிகளை நாங்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பாலானோர் கண்கள் சிவந்திருக்கின்றன என்கிற புகாருடன் தான் வருகிறார்கள்.
Add Comment