கலை வேறு, அறிவியல் வேறு. இரண்டும் இணைகோடுகள்போலத் தொடர்ந்தாலும் ஒன்றாக இயலாது. அறிவியல் என்பது சில திட்டமிட்ட விதிகளுக்கு உட்பட்டது. ஆனால் கலை என்பது கலைஞனின் கற்பனை சார்ந்தது. எனவே சுதந்திரமான சிந்தனைதான் கலையின் ஆதார ஸ்ருதி. ஆனால் சமீபத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பேரலை ஒரு பெரும் மாற்றத்தினைக் கொண்டுவந்துள்ளது.
பன்னெடுங்காலமாக மனித குலம் மட்டுமே கோலோச்சி வந்தது கலைத்துறையில் முதன்முறையாக மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமான போட்டி உருவாகியுள்ளது. ஆம்… மனிதக் கண்டுபிடிப்பான ஏ.ஐ. தொழில்நுட்பம் கலைப் படைப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
Add Comment