அவதூதர்கள் என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அவதூதர்கள் என்பவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள். உடல் உணர்வுகளைத் துறந்தவர்கள். எந்தப் புவியியல் தொடர்பும் கொள்ளாதவர்கள். சீதோஷ்ண நிலை பாதிக்காத, பசி, தூக்கம், உணவு, உறைவிடம் போன்ற எந்தத் தேவைகளும் இல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் காலத்தைக் கடந்தவர்கள். எப்போதும் அமைதியாக, ஆனந்தமாக தனக்குத்தானே பேசியபடி, சிரித்தபடி, பரவசநிலையிலேயே இருப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்களது உணவே ஆனந்தம்தான். யாரிடத்திலும் எதையும் எப்போதும் எதிர்பார்க்காதவர்கள். தேவைப்படும்போது மட்டுமே தன்னை வெளிப்படுத்துபவர்கள்.(ஆனால்… ஒரு விந்தையான விஷயம், இப்படி இருப்பவர்கள் எல்லோருமே அவதூதர்கள் அல்ல.)
அத்தகைய அவதூதர்களில் ஒருவர்தான் மாயம்மா. சித்தர்கள் மரபில் தவிர்க்கவியலாத, முதல் பெண் ஞானி மாயம்மா. இந்த மாயம்மா யார்..? எங்கே பிறந்தார்..? எப்போது கன்னியாகுமரியில் தோன்றினார்..? எத்தனை வயது..? இது மாதிரியான எந்தத் தகவல்களும் யாராலும் ஊர்ஜிதப்படுத்தவோ, உறுதிபடுத்தவோ இயலாதவை.
செவிவழிச் செய்தியாக மக்களால் சொல்லப்படுபவை….
Add Comment