உக்ரைனில் போர் நடக்கிறது. வாழ்வாதாரம் இழந்து மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள் என்று அனுதாபப்படுகிறது உலகம். அங்கோ ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்தைத் தொடும் நிலையிலிருக்கிறது. வீட்டுமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று சொத்துகளின் விலை கூடிக்கொண்டே போகிறது. எப்படி முரண்படுகின்றன இந்தப் போரும் பொருளாதாரமும்?
சென்ற வருடம் போர் தொடங்கியவுடன் பொருளாதாரம் சரிந்தது. பணவீக்கம் எகிறியது. கூடவே ரியல் எஸ்டேட் சந்தையும் 30-40 சதவீதம் சரிந்தது. மக்கள் வீடுகளை விட்டுவிட்டு ஒன்று, போரிடச் சென்றார்கள். அல்லது நாட்டைவிட்டு இடம்பெயர்ந்தார்கள். இன்று போர் என்பது இயல்புநிலை வாழ்க்கை என்றாகிவிட்டது.
Add Comment