செப்டம்பரில் தனது பருவகாலச் சடங்கான, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விழாவை கடந்த வாரம் முன்னெடுத்தது அமேசான். (Amazon Fall 2023 Launch Event) இந்த முறை பெரும்பாலான தனது புதிய தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவை புகுத்தியிருக்கிறது. LLM (Large Language Model) எனப்படும் தீவிரச் செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்களில் ஒன்றை இணைத்து அதன் மூலமாகப் பயனர்களின் தேவைகளை தானே கற்றறிந்து உணர்ந்து, புரிந்துகொண்டு, அடிக்கடி பயன்படுத்தும் சேவைகளை நினைவு வைத்துக்கொண்டு, புதியனவற்றை உருவாக்குகிற அளவிற்கு அவற்றை மேம்படுத்தியிருக்கிறது.
இதன் மூலமாக செயற்கை நுண்ணறிவேற்றப்பட்ட அலெக்ஸா உலகின் தன்னிகரில்லாத ஒரே வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உருவாகியிருக்கிறது என்று தோள்தட்டுகிறது அமேசான். அதைப் பற்றியும், இன்னபிற புதிய அறிவிப்புகள் பற்றியும் ஒரு சிறிய அறிமுகத்தை இக்கட்டுரையில் பார்த்துவிடலாம், வாருங்கள்.
good one sir..except the fire stick and soundbar..the title and beginning felt hanging..