தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று நிஜமானது. ஆம். சென்னை – நெல்லை உள்பட ஒன்பது புதிய வந்தே பாரத் வழித்தடங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார்.
இதில் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, திருவனந்தபுரம் – காசர்கோடு, ஹைதராபாத் – பெங்களுரு, ராஞ்சி – ஹௌரா, ரூர்கேலா – பூரி உள்பட ஒன்பது வழித்தடங்களில் இன்று முதல் வந்தே பாரத் இயங்கும். திருநெல்வேலி – சென்னை தடத்திற்கான முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செவ்வாய் தவிர அனைத்து தினங்களிலும் இந்த ரயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment