தீபாவளி நெருங்கிவிட்டால் மக்கள் மனதில் ஒரு உற்சாகமும் சிறுவர்கள் மனதில் ஒரு குதூகலமும் வரத் தொடங்கி விடும். மக்களுக்குப் போனஸ், சிறுவர்களுக்குப் புதுத் துணிகள், காலணிகள், வெளியூர்ப் பயணங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டாசுகள்… வாணவேடிக்கைகள்….
அதே தீபாவளி நெருங்குகையில் ஓர் ஊரின் மக்கள் மட்டும் வயிற்றில் பதைபதைப்போடு வாழ்கிற நிலைமையும் உண்டு. ‘குட்டி ஜப்பான்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி நகர மக்கள்தான் அவர்கள். வருடம் முழுதும் இந்த ஒரு பண்டிகைக்காக அவர்கள் உழைப்பது பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பட்டாசு வெடிக்கத் தடை, சரவெடி கூடாது, காற்று மாசுபடுவது அளவுக்கு அதிகமாக இருக்கிறது, நீதிமன்ற வழக்குகள், பொதுநல வழக்குகள்… என்று அவர்கள் சந்திக்கும் பிரச்சினை ஏராளம்.
Add Comment