மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்குப் பிறகு இந்தப் பக்கத்தில் எழுதிய குறிப்பை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். இனியேனும் அக்கட்சி பாரதிய ஜனதாவிடம் மண்டியிட்டுக்கொண்டிராமல் தனித்து இயங்க ஆரம்பிப்பதே அக்கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று சொல்லியிருந்தோம்.
இன்று அது நடந்திருக்கிறது.
அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனால், முடிவு முக்கியம். எடுத்த முடிவில் நிலைத்து நிற்பது அதனினும் முக்கியம்.
மத்தியில் ஆளும் கட்சியுடன் நல்லுறவு காப்பது மாநிலத்தின் நலனுக்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மிரட்டலின் பேரில் தக்கவைத்துக்கொள்ளப்படும் உறவுகளுக்கு ஒரு பொருளும் இல்லை. பாரதிய ஜனதாவை அனுசரித்துச் சென்றால் மாநிலக் கட்சிகளுக்குப் பிரச்னை இராது; சிறிது முரண்பட்டாலும் ரெய்டுகள், கைதுகள், முடிவற்ற விசாரணைகள் என்று அன்றாடங்களை நிலைகுலைய வைப்போம் என்பது அப்பட்டமான மிரட்டல்.
Add Comment