Home » வங்கத்து ராணி நந்தினியா? குந்தவையா?
உலகம்

வங்கத்து ராணி நந்தினியா? குந்தவையா?

ஹசீனா

வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால் இங்கு பதினேழு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ரஷ்யாவின் மக்கள் தொகையைவிட அதிகம்.

பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் (1947), பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டு, கிழக்குப் பாகிஸ்தான் என்ற பெயரைப் பெற்றது. சில வருடங்களிலேயே, அந்த நிலத்தின் மொழியான பெங்காலியை பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற போராட்டம் உருவானது.

கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கு இருந்த தூரம், கலாச்சார மற்றும் மொழி இடைவெளிகளும், அதை ஆதரித்து ஏற்க மறுத்த மேற்கு பாகிஸ்தானின் போக்கும், கிழக்கில் தனி நாடு கோரும் சுதந்திர உணர்வைத் தூண்டிவிட்டன. 1971 மார்ச் மாத அளவில் பங்களாதேஷ் சுதந்திரப் போர் தொடங்கியது. இந்திய ராணுவமும் பங்களாதேஷ் படையுடன் இணையவே, டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவமும் பணிந்தது. வங்கதேசம் உருவானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!