“சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து வீசி அடிக்கும்”
ஸ்புட்னிக்-01 போனதுதான் போனது… அமெரிக்காவில் கடுமையான பதற்றம்! அரச அதிகாரிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை எல்லாத் தரப்பினரிடையேயும் பரவிய அந்த அதிர்ச்சி அலைகளை விவரிக்கவே முடியாது.
அந்த மூன்று வாரங்களுக்குள் ‘த நிவ்யோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில் மட்டும் ‘ஸ்புட்னிக்-01 ‘ பற்றிய 279 கட்டுரைகள் பிரசுரமாயின! அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 11 ஆக்கங்கள்! ஏனையப் பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்தப் பறந்துபோன பந்தைப் பற்றியே முழங்கிக் கொண்டிருந்தன. அரசாங்கத்தை விமரிசித்தும் அழுத்தம் கொடுத்தும் தலையங்கம் போட்டன.
யூ.எஸ். மட்டும் என்ன சும்மாவா இருந்தது..? சின்னதாக எத்தனையோ செய்மதிகளைத் தயாரித்து, ஏவுவதற்குப் பல முறை முயன்றது. ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை. ஆபரேஷன் பேப்பர்க்ளில் எல்லாம் வீண் போய்விட்டதோ.!
Add Comment