புளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கண்டறியப்பட்டது 1930-ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு நாமெல்லாம் சூரியக் குடும்பத்தில் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கிரங்கள் என்றே படித்தோம்.
2006-ஆம் ஆண்டு வான் விஞ்ஞானிகள், புளூட்டோ ஒரு தனிக்கோள் அல்ல, சூரியனைச் சுற்றி வந்தாலும் அதுவொரு குறுங்கோள் (Dwarf Planet) என்று அறிவித்தனர். பின்னர் பிரிட்டானிக்காவிலிருந்து பள்ளிப் புத்தகங்கள் வரை எல்லா இடங்களிலும் கிரகங்கள் மொத்தம் எட்டு என்று திருத்தப்பட்டது.
அதுபோல உலகில் உள்ள கண்டங்கள் மொத்தம் ஏழு என நாம் படித்திருக்கிறோம். ஆனால் தற்போது புவியியலாளர்கள் எட்டாவதாக ஒரு கண்டத்தின் வரைபடத்தை வெளியிட்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு அருகில் தீவுகளின் கூட்டமாக அமைந்திருக்கும் அக்கண்டம் ஜிலாந்தியா (Zealandia) என்று அழைக்கப்படுகிறது.
Add Comment