எந்தவொரு கோயிலிலும் ஏதோவொரு சிறப்பம்சம் இருக்கிறது. அவற்றில் ஒருசிலதான் நமக்கு தெரிய வருகிறது. பல விஷயங்கள் நமக்குத் தெரிய வருவதில்லை.
நவக்கிரக தோஷ பரிகார ஸ்தலங்கள், திருமணம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள பிரச்சினைகளுக்கு வழிபடவேண்டிய கோயில்கள், கல்விக்காக வழிபட வேண்டிய ஆலயங்கள், கடன் பிரச்சினை தீர, நோய் நொடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள… இப்படி மனிதவாழ்வில் இன்ச் பை இன்ச்சாக ஏற்படக்கூடிய எல்லா பிரச்சினைகள் தீர்வதற்கும் வழிபடவேண்டிய கோயில்கள் எண்ணற்றவை உள்ளன. உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் இருப்பதுபோல, கோயில்களும், பரிகார ஸ்தலங்களும் பல யுகங்களாக இருந்து வருகின்றன.
இதில், குறிப்பாகப் பெண்கள் தங்கள் ஆன்ம பலத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்த்துக் கொள்வதற்காகவும், வாழ்நாளில் கட்டாயம் வழிபடவேண்டிய கோயிலாக சப்தமங்கைகள் கோயில்கள் முதலிடமும், முக்கியத்துவமும் பெறுகின்றன.
Add Comment