ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது.
“‘எக்ஸ்ப்லாரர்-01’ செய்மதி தயாராகிவிட்டது அதிபர் அவர்களே”
அமெரிக்க அதிபர் ஈசன்ஹோவரிடம் ஒரு நற்செய்தி வருகிறது. இது மட்டும் சாத்தியமானால்…. ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் அத்தனை அவப்பெயர்களையும் ஒரே நொடியில் தீர்த்து விடலாம்.
Add Comment