இங்கிலாந்தில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் தர்மன் சண்முகரத்னம். இப்படிப் பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் / வகிப்பவர்கள் வரிசையில், தீவு தேசமான மொரிஷியசில் விவேக் ஜோஹ்ரி சேர்கிறார். அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ளார். கவனிக்கப்படவேண்டிய விஷயம், இவர் இந்திய வம்சாவளியெல்லாம் இல்லை, நேரடி இந்தியப் பிரஜை . அதுவும் இந்திய உளவுத் துறை அமைப்பான ராவின் முன்னாள் அதிகாரி.
இவர் மட்டுமல்ல… இவருக்கு முன்னால் அப்பதவியில் இருந்தவர் குமரேசன் இளங்கோ . இவரும் இந்தியர் அதோடு முன்னாள் ரா அதிகாரி. இன்று நேற்றல்ல, 1980-களில் இருந்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட இந்திய அதிகாரிகள் இந்நாட்டில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து தாய் வீடு சீதனமாக மொரீஷியசுக்கு இப்படி அதிகாரிகள் அனுப்பப்படுவதன் பின்னணியில் ஒரு சுவாரசியக் கதை இருக்கிறது.
Add Comment