Home » நடந்தது இது. நடக்கப் போவது எது?
தமிழ்நாடு

நடந்தது இது. நடக்கப் போவது எது?

‘என் மண் என் மக்கள். வேண்டும் மீண்டும் மோடி’ என்னும் முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து இந்த நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

மொத்தம் ஐந்து கட்டங்களாக 168 நாட்கள் என ஜூலை முதல் ஜனவரி 2024 வரை மிக நீண்டகால நடைப் பயணமாகத் திட்டமிடப்பட்டது. இராமேஸ்வரம் முதல் சென்னை வரை அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய நடைப் பயணம்.

1700 கிமீ நடந்தும் 900 கிமீ வாகனத்திலும் இந்த நடைப் பயணம் தொடங்கி நிறைவுபெறும் எனச் சொல்லப்பட்டது. தொடங்கிய முதல் நாளில் மூன்று கி.மீ. நடந்தார். பின்னர் இந்த யாத்திரைக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வாகனத்தில் ஓய்வெடுத்துக் கொண்டார். அமித்ஷாவும் தன் பங்கிற்கு நிகழ்வு தொடங்கிய இடம் முதல் தங்கியிருந்த ஹோட்டல் வரை அரை கி.மீ நடந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!