ஒவ்வொரு வருடமும் இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முரகாமியின் பெயர் இருக்கும். ஒவ்வொரு வருடமும் பரிசு அவருக்கு இருக்காது. இது இன்று நேற்றல்ல. பல வருட காலமாக நடப்பதுதான். இந்த வருடமும் இந்தத் திருவிழா ஜோராக நடந்து முடிந்தது. ஆனால் முரகாமி இதையெல்லாம் பொருட்படுத்துவதேயில்லை. அவருண்டு, அவரது எழுத்துண்டு, ஓட்டப்பயிற்சி உண்டு. உலகெங்கும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. நம் காலத்தின் மிகப்பெரும் கலைஞர் ஹாருகி முரகாமி. நோபல் கிடைத்தால் என்ன? கிடைக்காது போனால் என்ன? மேதையை நாம் கொண்டாடுவோம்.
இசை, புத்தகங்கள் மற்றும் பூனைகள்- இவை முரகாமியின் உலகில் சிறப்புப் பிரஜைகள். ஹாருகி முரகாமி எழுதும் கதைகள் மட்டுமல்ல அவரின் வாழ்கைக் கதையே வசீகரமானது தான்.
எளிமையான வார்த்தைகளில் வாழ்க்கையின் பெருஞ்சிக்கல்களை அநாயாசமாகச் சொல்லிச் சொல்கிறார் முரகாமி. தனித்துவமானது முரகாமியின் உலகம். மாயமும் எதார்த்தமும் மாலைநேர வானில் தோன்றும் எண்ணற்ற வண்ணங்கள்போல, வடிவங்கள்போல ஒன்றிணைந்து ஜாலங்கள் செய்யும் உலகம் அது. வானம் என்றுமே புதியதுதான். முரகாமியின் படைப்புகளும் அதுபோலவே.
கனவுகளை, விரும்பும் வண்ணம் விழித்திருக்கும் போதே தன்னால் காண இயல்வதும், அவற்றை நிறுத்தவும் தொடரவும் முடிவதுமே தன் கதைகளின் தனித்தன்மைக்குக் காரணம் என்கிறார் முரகாமி.
What a tribute
‘என் இலக்கிய எதிரி’ என்கிற பாரா சார் பதிவின் மூலம்தான் முரகாமி அறிமுகம்.
கனவுகளை, தான் விரும்பும் வண்ணம் விழித்திருக்கும்போதே காண இயலும் ஒரு மனிதர் எப்படி எழுதுவார்?
‘மாலை நேர வானில் தோன்றும் எண்ணற்ற வண்ணங்கள் வடிவங்கள் போல ஜாலங்கள் செய்து எதார்த்தத்தையும் மாயத்தையும் பிணைத்து எழுதுவார்.’ என்கிறார் @Prof. Kuppusamy Madras Paper
தனிமையை ஆராதனை செய்யும் நாயகனைப் பற்றிய தன்னிகரில்லாத கட்டுரை.👏🏼