சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடகம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கிறது. காவிரி நதி நீர் ஆணையம் முதல் உச்ச நீதி மன்றம் வரை யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு எடுத்துச் சொல்லி, நியாயமாகத் தர வேண்டிய நீரைத் தரச் செய்ய வேண்டும் என்று கோருவதே அந்தத் தீர்மானம்.
அதிமுக உள்பட எதிர்க் கட்சிகள் அனைத்தும் இதனை ஆதரித்துப் பேசியிருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் தலைமையிலான பாஜகவினர் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள். மக்கள் நலனில், மாநிலத்தின் நலனில் சற்றும் அக்கறை இல்லாதிருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.
வேறெந்தப் பிரச்னையில் வேண்டுமானாலும் அவர்கள் அரசியல் செய்துகொள்ளலாம். தவறில்லை. ஆனால் காவிரி நீர் என்பது நமது அடிப்படை வாழ்வாதார உரிமை.
Add Comment