Home » திறக்க முடியாத கோட்டை – 1
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 1

1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன்

தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்)
இடம்: கிரெம்ளின் மாளிகை
அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை

கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில் அமர்கிறார். பின்னால் ரஷ்ய தேசியக்கொடியும், அதிபரின் முத்திரை கொண்ட பாரம்பரியக் கொடியும் இருந்தன.

முப்பதடி தூரத்தில், இருபுறமும் வரிசைகளில் சபை உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். பிரதம மந்திரி, வெளியுறவு, பாதுகாப்பு, இராணுவம், புலனாய்வு என்று நாட்டின் முக்கியத் துறைகளின் அமைச்சர்களே இவர்கள். பின்னால் நான்கைந்து வீடியோப் பதிவாளர்கள். ரஷ்யா இந்த நூற்றாண்டின் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம்.

வணக்கம் கூறி ஆரம்பிக்கிறார் புதின். உக்ரைனின் கிழக்கில் ரஷ்யாவைத் தொட்டடுத்த டோன்பாஸ் பகுதியின் சூழலை விவாதிப்போம் என்கிறார். லுஹான்ஸ்க் மற்றும் டோனெஸ்க் நகரங்களை உள்ளடக்கியது இப்பகுதி. சுருக்கமாக முன்னுரையும் வழங்குகிறார். கிரீமியாவை விடுவித்தபோதே (2014), டோனெஸ்க் மக்களும் உக்ரைனில் அதிருப்தி கொண்டிருந்தனர். போரை நிறுத்த மின்ஸ்க் ஒப்பந்தங்களை உருவாக்கின ஜெர்மனியும் பிரான்ஸும். இன்றுவரை இவை மதிக்கப்பட்டதில்லை. கூடவே நேட்டோ மற்றும் உக்ரைனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் மூலம், இவையெதற்கும் அமெரிக்காவிடமிருந்து பதிலில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!