இன்றைய சூழலில் அதிவிரைவாய் வளர்ந்துவரும் இரண்டு துறைகள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (பயோ டெக்னாலஜி மற்றும் ஏ.ஐ). இரண்டும் வெவ்வேறு துருவங்கள் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. பயோ டெக்னாலஜியும், ஏ.ஐயும் ஒன்றினால் மற்றொன்று பயன்பெறுகின்றன.
செயற்கை நுண்ணறிவு என்னும் துறையின் அடிநாதமே பயோ-இன்ஸ்பயர்டு கம்ப்யூட்டிங் தான். அதாவது உயிரினங்கள் எவ்வாறு ஒரு சிக்கலை அணுகுகின்றன என்று ஆராய்ந்து அதேபோலக் கம்ப்யூட்டர்களைச் செயல்பட வைப்பது.
இங்கு உயிரினங்கள் என்பது மனிதனை மட்டுமே குறிப்பதல்ல. அறிவு என்பது மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அறிவை அற்றங் காக்கும் கருவியாக அனைத்து உயிர்களுமே பயன்படுத்துகின்றன.
Add Comment