உலகின் மிகப் பெரிய இரண்டு மக்களாட்சியில், கட்சிகளும், அவற்றின் கொள்கைகளும் நிர்ணயம் செய்யும் முறையும், தேர்தல் முறையும், போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் மிகவும் வேறுபடுகின்றன.
இந்தியாவில் மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கிட்டத்தட்ட 2200 கட்சிகள். பலவற்றின் உறுப்பினர்களுக்கேகூட கட்சியின் கொள்கைகள் புரிந்திருக்குமா என்றால் சந்தேகம்தான். இரண்டு தலைவர்களிடையே கருத்து வேறுபாடோ அல்லது உயர்ந்தவன் யார் என்ற போட்டியோ ஏற்படும்போது கட்சி பிளவுபட்டுப் புதிய கொடியுடன் கட்சிகள் தோன்றும். கட்சித் தலைவர்கள் காலத்திற்கும் தங்களுக்கான வாய்ப்பும் பொறுத்து கட்சி மாறுவதும் நடக்கும். அமெரிக்காவில் கட்சி மாறுவது உண்டு என்றாலும் அது அடிக்கடி நிகழும் நிகழ்வில்லை.
அமெரிக்காவில் மக்களே நேரடியாக தங்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிகப்பெரிய கட்சிகள் என இரண்டே இரண்டுதான். க்ரீன் டீ கட்சி என்ற ஒன்றிலிருந்து எப்போதேனும் ஒரு முறை ஒருவர் போட்டியிடுவார். அல்லது சுயேச்சை வேட்பாளர்கள்.
Add Comment