நொறுக்குத் தீனிகளின் உலகம் சுவாரஸ்யமானது. அலாதியானது. அவரவர் மனதோடு நெருங்கிய தொடர்பு உடையது. வித்தியாசங்கள் எதுவுமின்றி அனைவரையும் அரவணைக்கும் சமத்துவம் மிக்கது. காலை, மாலை, இரவு என வேளைப்பாகுபாடுகள் இன்றி எந்நேரமும் உண்ணத்தக்கது. ஒருவகையில் இவைகள்தான் நொறுக்குத் தீனியின் இலக்கணங்கள். இவை எல்லாம் இருந்தால்தான் அது நொறுக்குத் தீனி. இல்லையென்றால் அது வெறும் தீனிகூட கிடையாது.
நொறுக்குத் தீனி என்பதின் நாகரீக நாமகரணம் சிற்றுண்டி அல்லது ஸ்நாக்ஸ். உணவு உண்ணுவதை ஒரு பாடத்திட்டமாக வைத்தால் இந்த ஸ்நாக்ஸ் பற்றிய பாடத்தை ‘சைடு டிஷ்’ என்ற குறுகிய வட்டத்தில்சேர்க்காமல் ‘மெயின்டிஷ்’ எனக்கூறி முதன்மைப் பாடமாகத்தான் வைக்கவேண்டும் என்பது ஸ்நாக்ஸ்ராமன்களின் கோரிக்கை.
ஊருக்கு ஊர் விதவிதமான சிற்றுண்டி சாம்ராஜ்ஜியங்கள் இருக்கின்றன. சேலத்தில் ஸ்நாக்ஸ் கிங் அன்றும், இன்றும் தட்டுவடை செட்- தான். இது ஒரு எளிமையான,ஆனால் மிக ருசியான உணவு. தட்டையான வடை, தட்டுவடை எனப்படுகிறது.
த(ப)ட்டையைக் கெளப்பிட்டீங்க நண்பரே