Home » சொந்த நாட்டின் அகதிகள்
உலகம்

சொந்த நாட்டின் அகதிகள்

இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி இங்கே வாரணாசி கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடு நடந்தது. போர் ஆரம்பித்த பிறகு பலி எண்ணிக்கையைத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பி.பி.சி. செய்தி இப்படி இருக்கிறது. “இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 500 பேர் இறந்துவிட்டார்கள். ஹமாஸ் தாக்கியதில் இஸ்ரேலில் 700 பேர் கொல்லப்பட்டனர்”. உயிர் போனபிறகும் இறப்பும் கொலையுமாக வகை பிரித்துப் பதிவாகிறது செய்தி. இப்படித்தான் மொத்த உலகமுமே பாலஸ்தீனியர்களை மேற்கு நாடுகளின் கண்கொண்டு பார்க்கின்றன. பாலஸ்தீன மக்களின் தரப்பு நியாயம் மட்டுமல்ல, அந்த மக்களே பலர் கண்களுக்குத் தெரிவதில்லை. மாற்றுக் கருத்துள்ள நாடுகளும் மேற்கு நாடுகளைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதற்கும் மிஞ்சி ஏதேனும் செய்தால் சுயலாபம் ஒன்றே குறிக்கோளாக உள்ளது.

தாக்குதல் ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்த நிலையில் இஸ்ரேல் தரப்பில் 1300 பேரும், பாலஸ்தீன் தரப்பில் தோராயமாக 2300 பேரும் பலியாகியுள்ளனர். காஸா, மேற்குக்கரை இரண்டையும் சேர்த்து, பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை இது. இதில் மேற்குக் கரையில் பலி எண்ணிக்கை ஐம்பது என்ற அளவில்தான் உள்ளது. காஸாவைக் குறிவைத்தே முதன்மைத் தாக்குதலை நடத்துகிறது இஸ்ரேல். ஹமாஸ் எந்நேரமும் ஏவுகணத் தாக்குதல் நடத்தலாம் என்று இஸ்ரேல் தயாராகவே இருந்தது. இஸ்ரேலின் இருப்புத் திரை (Iron Dome) பாதுகாப்பு அமைப்பு 2011-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக இம்மாதிரி ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்து வந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • தற்போதைய நிலவரத்தை காய்த்தல் உவத்தல் இன்றி பதிவு செய்த கட்டுரை ஆசிரியர் கோகிலா அவர்களுக்கும் வெளியிட்ட மெட்ராஸ் பேப்பருக்கும் நன்றிகள். அன்புமிகு ஆசிரியர் பாரா அவர்கள் தமிழ் இந்துவிலும், விகடனிலும் எழுதுவதால் ஏதோ ஒரு கட்டூரை போட்டோம் என்றில்லாமல் ஆழமான விரிந்த பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தகவல்கள் வியப்பைத் தருகிறது. எதார்த்த களநிலவரத்தை அளிக்கிறது. அமீரகத்தில் எனது சக ஊழியர்கள் காசாவிலும், மேற்கு கரையிலுமாக பல உறவினர்களை விட்டு கதிகலங்கி நிற்பதை பார்க்கிறேன். மேலும் ஆக்கிரமிப்பு இஸ்ரயீலில் இருந்த பலர் ஜோர்டான், லெபனான், என பல நாட்டுக்கு முன்பே குடிபெயர்ந்திருந்தாலும் அவர்களது இரத்த பந்தங்கள் படும் அவஸ்தைகளை தினமும் சொல்லி வருந்துகிறார்கள். எது எப்படியானாலும் இவர்களுக்கு இறைவனின் கருணை கிடைத்தால் நலம். மீடியாக்கள் வகுத்துக்கொண்ட சூழலைப் பற்றி கவலைப்படாமல் ஒருசார்பு இல்லாமல் விமர்சனங்களைப்பற்றி கவலைப்படாமல் கட்டுரை இடம்பெற்றுள்ளது, மனமார்ந்த வாழ்த்துகள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!