ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே அசையாமல் இருப்பது போலத் தெரியும்!
தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், இரண்டு வண்டிகளும் இறக்கை கட்டிப் பறப்பது புரியும். “வேற வேல இல்ல இவனுகளுக்கு” என்று திட்டவும் செய்வார்கள். ஆனால், உள்ளே இருக்கும் நடத்துனர்களைக் கேட்டுப் பாருங்கள். இரண்டு பேரும் ஒரே ஸ்தானத்தில் இருப்பதாகவும், எப்படியாவது அடுத்தவரை முந்த வேண்டும் என்றும் அடித்துச் சொல்வார்கள்.
பூமியிலிருந்து விண்ணுக்கு ஏவப்படும் சாட்டிலைட்களில் சில, பூமியின் அதே வேகத்தில் சுற்றுகின்றன. அதனால் நமக்கு அவை அசையாத பொருட்களாகத் தோன்றும். ‘ ஜியோ ஸ்டேஷனரி சாட்டிலைட்ஸ்’ எனப்படுகின்றன இவை.
Add Comment