Home » வேப்பிலை ரசமும் கிராம்புச் சட்னியும்
நகைச்சுவை

வேப்பிலை ரசமும் கிராம்புச் சட்னியும்

எங்கள் பக்கத்து வீட்டிற்குச் சென்ற வருடம் புதிதாக ஒரு தமிழ்க் குடும்பம் குடி வந்தது. குடி வருவதற்கு முன்பு வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்து முடிக்க வந்தவர்களிடம், நாங்களும் தமிழர்கள் என்று வாட்ச்மேன் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட அடுத்த நிமிடமே அவர்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்கள்.

அப்படி அவர்கள் கதவைத் தட்டியதோ ஒரு வேலை நாளின் மாலைப்பொழுதில். பொதுவாக வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது என் உடம்பில் முப்பது சதவிகித சார்ஜ் மட்டுமே இருக்கும். அன்றோ பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே. வெறும் ஐந்து சதவிகிதம் சார்ஜ் மட்டுமே என் உடம்பில் எஞ்சி இருந்தது. மேலும் கொஞ்சம் சார்ஜ் ஏத்தலாம் என்று நினைத்து சூடான காபியைக் குடித்துக் கொண்டு இருந்தேன். இருப்பினும் வந்தவர்களை வரவேற்று “உட்காருங்க, காபி தர்றேன்” என்று உபசரித்தேன். (அபுதாபியில் வாழ்ந்தாலும் நான் ஒரு தங்கமான திருநெல்வேலி பெண்ணல்லவா.? திருநெல்வேலி உபசாரத்தில் குறை இருக்கலாகுமோ?) அந்த குடும்பத் தலைவி காபி என்ற வார்த்தையைக் கேட்டதும் புன்னகையுடன் தலையாட்டிவிட்டார். ஆனால் குடும்பத் தலைவரோ, ‘வேண்டாம் வேண்டாம்’ என்று பதறினார்.

‘நான் பார்ப்பதற்கு காபி போடக் கூட தெரியாத பெண் மாதிரியா இருக்கிறேன்?’ என்று மனதிற்குள் பொருமிக்கொண்டே அவரிடம் என் வீட்டுக் காபி ஃபில்டரை எல்லாம் எடுத்துக்காட்டினேன். “எங்க வீட்டில் ஃபில்டர் காபிதான் சார், நல்லா இருக்கும்” என்று சொன்னால் அதைக் கேட்டு அவர் மேலும் பதட்டமானார். “ஐயையோ, ஃபில்டர் காபி என்றால் இன்னும் மோசம். அது உடம்பில் உள்ள பித்தத்தை எல்லாம் நம் தலைக்கு ஏற்றி முடியை எல்லாம் வெள்ளையாக மாற்றி விடும். எங்க வீட்டுல காபி, டீ எல்லாம் கண்ணால்கூடப் பார்க்க மாட்டோம்” என்று பெருமிதத்தோடு சொன்னார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!