“கும்பகோணம் பக்கத்துல, திருமங்கலக்குடின்னு ஒரு தலம்” என்றார் நண்பர்.
“என்ன சிறப்பு?”
“இறைவன் பிராணனைக் கொடுத்த ஸ்ரீபிராணநாதேஸ்வரர், அம்பாள் மாங்கல்யம் கொடுத்த ஸ்ரீமங்களாம்பிகை. அதாவது, ஆயுள் பாக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் ஒருசேர அருள்கிற கோயில். இதுபோக, இன்னொரு விசேஷம் இந்த கோயில்ல இருக்கு” என்றார்.
“என்ன அது…?”
“போய்ப் பார்ப்போம்” என்றார். கிளம்பிவிட்டோம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதானசாலையில் உள்ள ஆடுதுறையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது ஆடுதுறையிலிருந்து. ஆடுதுறைக்கு வந்துவிட்டால் அங்கிருந்து ஷேர்ஆட்டோ வசதியும் உள்ளது. கோயில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமானது. மிகப்பழமையானது.
Add Comment