காலை பதினொரு மணியிருக்கும். ரீட்டா தன் பாட்டியோடு உழுத நிலத்தில் கிழங்கு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தாள். சோவியத் தேசத்தின் வொல்கா நதிக் கரையில் அமைந்திருந்த செழிப்பான நிலமது.
“பாட்டி, அதோ அங்கே பார்”
வானத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் நடுநடுங்கியபடி பின்னே செல்கிறார்கள். இனந் தெரியாத ஒரு செம்மஞ்சள் வர்ணப் பொருள் வானிலிருந்து குதித்து இருவரையும் நோக்கி வருகிறது. பாட்டி, ரீட்டாவை இறுக்க அணைத்துக் கொள்கிறார்.
“யார் நீ?”
குழந்தை ரீட்டாவின் குரலில் அத்தனை நடுக்கம். ஆரஞ்சு வர்ண சூட் அணிந்திருந்த அந்த காஸ்மோனட், தலைக் கவசத்தினூடாகப் புன்னகைக்கிறார்.
“நான் யூரி ககாரின் குழந்தாய்”
“எங்கிருந்து வருகிறீர்கள்?” இலேசாக முணுமுணுக்கிறாள் ரீட்டா.
Add Comment