சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் சிவகாசியில்தான் பட்டாசின் வயது நூறு.
ஆனால் உலகின் அனைத்து மூலைகளிலும் கொண்டாட்டங்களின் அடையாளமாகத் திகழும் பட்டாசின் வரலாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. கி மு. இரண்டாம் நூற்றாண்டளவில் சீனாவில் மூங்கில் துண்டுகள் நெருப்பில் விழுந்து வெடித்தது தான் அதன் முதல் வரலாற்றுப் பதிவு.
பொட்டாசியம் நைட்ரேட் என்பது ஒரு வகை உப்பு. கந்தகம் ஒரு அலோகம். காபன் எரிபொருள். எரிதலையும் வெடித்தலையும் தன் பண்பாகக் கொண்ட இம்மூன்றின் குறிப்பிட்ட கலவை தான் பட்டாசின் வெடி மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டளவில் இதைக் கண்டறிந்தவர்களும் சீனர்கள் தான்.
Add Comment