கால் பந்தாட்டத்தில் வெல்வதற்கு இனி எந்த விருதுமே மீதமில்லை என்ற நிலையில், ’பேலன் தி ஓர்’ விருதினை எட்டாவது முறையாக வென்றிருக்கிறார் லியோ. ‘பேலன் தி ஓர்’ என்பது சிறந்த கால்பந்தாட்டக்காரர்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த உயரத்தை உடனடியாக எட்டுமளவுக்கு எவரும் இல்லையென்பதிலிருந்தே இந்த ‘லியோ’னல் மெஸ்ஸியின் ஆதிக்கம் தெளிவாகும். வெகுவாகக் கொண்டாடப்பட்ட அல்லது மெஸ்ஸியோடு எப்போதும் ஒப்பிடப்படுகிற போர்ச்சுக்கல்லின் ரொனால்டோவே 5 முறைக்கு மேல் இதனைப் பெற முடியவில்லை.
ஈடு இணையற்ற ஆட்டக்காரன் என்று நிரூபிக்கப்பட்ட மெஸ்ஸியை, “இனி நீ ஆடவே வேண்டாம்” என்று அர்ஜெண்டினா நாட்டவர்களே குரல் கொடுத்த காலமும் இருந்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை. இந்த ‘லியோ’வின் பாதை ரோஜாப்பூக்களால் மட்டுமே நிரம்பியதில்லை. இனி கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் (2014) ஜெர்மனியிடம் இறுதிப் போட்டியில் தோற்றுப் போன வடுவிலிருந்து மெஸ்ஸி மீண்டு வரும் வாய்ப்புகள் இல்லாமலாகிப் போய் விட்டதென்றே கால்பந்தாட்ட நிபுணர்களால் கணிக்கப்பட்டது.
Add Comment