Home » கோயிலுக்குள் ஓட்டல்
சுற்றுலா

கோயிலுக்குள் ஓட்டல்

இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய இவ்வாலயத்தின் கட்டுமாப் பணிகள் இடையில் கோவிட் மற்றும் இதர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஒருவழியாகத் திறப்பு விழா இவ்வாண்டு அக்டோபர் 8ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது.

இவ்வாலயத்தின் பிரம்மாண்டம் பார்க்கிற யாவரையும் புருவம் உயர்த்த வைக்கும். ராபின்ஸ்வில்லியில் உள்ள பேப்ஸ் ஸ்வாமி நாராயண அக்சர்தாம் (BAPS Swaminarayan Akshardham) சுமார் 183 ஏக்கரில் பரந்து விரிந்த ஒரு பிரம்மாண்டமான இந்துக்கோயில் (அ) நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. இதைக் கட்டுவதற்குத்தான் எத்தனை உழைப்பு, எத்தனை பிரச்சனைகள்?? அத்தனையையும் தாண்டி இன்று ராபின்ஸ்வில்லியின் ஒரு வரலாற்று அடையாளமாக மாறி மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கின்றது.

BAPS ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா அமைப்புக்குப் பின்னால் ஒரு சிறிய வரலாறு உள்ளது. இந்த ஸ்வாமிநாராயண் அமைப்பானது குஜராத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் சுவாமி நாராயணரால் நிறுவப்பட்டது, பின்னர் அவரது மூன்றாவது ஆன்மீக வாரிசான பிரம்மஸ்வரூப் சாஸ்திரியா மகாராஜால் குஜராத்தின் போச்சாசன் என்ற சிறிய நகரத்தில் முறைப்படுத்தப்பட்டது. 100 ஆண்டுகளுக்கும் மேலான வளர்ச்சி கொண்ட இந்த அமைப்பு, 3,850 மையங்களையும், 55,000 தன்னார்வலர்களையும், உலகம் முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான நம்பிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இதன் மூலக்கடவுள்களாக ஸ்வாமி நாராயணர், ராதே கிருஷ்ணா, ராமா-சீதா மற்றும் சிவ-பார்வதி ஆகியோர் உள்ளனர். இதில் முதல் பகவானாகக் கருதப்படும் ஸ்வாமி நாராயணர் மனிதப் பிறப்பெடுத்து, பின்னர் மூலக்கடவுளாக இந்த அமைப்பினால் வணங்கப்படுகிறார். மொத்தத்தில் வைணவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தக் கோயில்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!