புதையல் என்ற மந்திரச்சொல் மனிதகுலத்திற்கு அளப்பரிய ஆனந்தந்தை அளிப்பது. பொருளாதார ரீதியாகவும், மானுடத்தின் ஆதியை அறிந்து கொள்ளும் பாரம்பரிய ஆராய்ச்சிகள் தொடர்பாகவும், பழம் பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்காகவும் என்று புதையல்களைத் தேடிய பல பயணங்களும், அகழ்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இப்போது அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ஒரு கப்பல் புதையல். `சான் ஜோஸ் கலியோன் (San Jose Galleon) என்ற போர்க் கப்பல். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் கொலம்பியாவின், கார்ட்டெகெனா (cartegana) கடற்பகுதியில் மூழ்கியது. அதை ஒரு கெட்டகனாவாக நினைத்து மறந்தே போயிருந்தது உலகு. 1981-ல் இதன் உடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான செய்திகளும், ஆராய்ச்சிகளும், உரிமை கொண்டாடுதலுக்கான சண்டைகளும் ஆரம்பித்து விட்டன.
சான் ஜோஸ் கப்பல், ஸ்பெயினின் மிக முக்கியப் போர்களில் ஒன்றின்போது, 1708-ஆம் ஆண்டில் பிரிட்டானியக் கடற்படைக் கப்பல்களால் மூழ்கடிக்கப்பட்டது. ஏராளமான பொக்கிஷங்களை அதனுள்ளே தேக்கி வைத்திருந்தது ஸ்பெயின்.
Add Comment