இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், உள்நாட்டின் பாதுகாப்பும் தீவிரவாத எதிர்ப்பும் ஜனநாயகக்கட்சியின் முக்கியக் கொள்கையில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. மனித உரிமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாமல் பாதுகாப்பதும் முக்கியக் கொள்கையாகச் சேர கொஞ்சம் கொஞ்சமாக இடது சாரி பக்கம் முழுவதுமாக மாறத் தொடங்கியது.
ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் என்பன உலகப் பருவநிலை மாறுவது பற்றியும் கவலை கொள்வது, எல்லா வகை மக்களுக்கும் உடல்நலப் பாதுகாப்பு வழங்குவது, தொழில் துறை உரிமைகள், சுற்றுச் சூழல் உரிமைகள் பாதுகாப்பு ஆகியனவே ஆகும்.
2006-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் சபை, மற்றும் செனேட்டிற்கான தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றதால் அவை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.
Add Comment