டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள எந்தச் செயல்திட்டத்தையும் கொண்டுவரவில்லை?’ என்று தொடங்கி வாகனக் கட்டுப்பாடு, தொழிற்சாலை மற்றும் அண்டை மாநில விவசாயிகள் எனச் சரமாரி கேள்விகள் பாய்ந்துகொண்டிருந்தன.
சென்ற வாரம் டெல்லி NCR பகுதியில் காற்றுத் தரம் (air Quality index) அபாயக் கட்டத்திற்கு மேல் எகிறியதுதான் நீதிபதியின் இந்தக் காட்டத்துக்குக் காரணம். உலகச் சுகாதார மையத்தின் பரிந்துரையைவிட 100 மடங்கு அதிகமான அளவுகள் பதிவாகியிருந்தன. நவம்பர் 9 – 10 பெய்த மழை சிறிது கருணை காட்டியது என்றாலும் இது தாற்காலிகமானது தான்.
Add Comment