ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்தோ அல்லது சமையல் வீடியோவைப் பார்த்தோ இயந்திர கதியில் சமைத்து விடலாம். ஆனால் சாப்பிடுவது என்பது நம்மிடம் உள்ள பல திறன்களைப் பயன்படுத்திச் செய்யவேண்டிய பவித்திரமான செயல்.
சாப்பிடுவது என்பது கைக்கும் வாய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சாதாரணச் செயல் இல்லை. ஐம்புலன்களின் சங்கமத்துடன் நடைபெற வேண்டிய அற்புதமான செயல். ஐம்புலன்களைப் பற்றி விலாவரியாகப் பாடம் நடத்தும் நம் பள்ளிக்கூடங்கள்கூட அந்தப் பாடங்களை உணவுடன் இணைத்து நடத்துவது இல்லை. அப்படி நடத்தி இருந்தால் புலன்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்திருக்கும். வக்கணையாகச் சாப்பிடுவதும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கைகூடி இருக்கும். அதை விட்டுவிட்டு உணவு என்பது நம் பசியைப் போக்கி, நம் உடலுக்குத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் பொருள் என்று மனனம் செய்ய மட்டும் கற்றுக் கொடுப்பதில் என்ன பிரயோஜனம்.? நீங்களே சொல்லுங்கள்.
சாப்பிடுவது என்பது ஒரே ஒரு செயல் தானே. அது எப்படி ஐம்புலன்களின் சங்கமமாகும் என்று யோசிக்கிறீர்களா..?
Add Comment