சென்னையில் எத்தனை மூத்த பஜார்கள் இருந்தாலும் அத்தனைக்கும் மூத்த முன்னோடி மூர் மார்க்கெட். சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள அல்லிக்குளம் வணிக வளாகம் தான் பழைய மூர் மார்க்கெட்.
எந்த மாவட்டத்தில் வசித்தாலும் இந்த மார்க்கெட்டை அறியாமல் மாணவப் பருவத்தைக் கடந்திருக்க மாட்டோம். ஏனெனில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான வழிகாட்டிகள், மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்களுக்கான சந்தை இது. மாணவர்கள் ஏன் இங்கே வருகிறார்கள் எனில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தின் விலை இங்கு ஐந்நூறு ரூபாய் தான். மாணவர்களுக்கு பட்ஜெட் முக்கியம். குறைவான பணம் உள்ள மாணவர்களுக்கான சந்தை இது.
இப்புத்தகங்களைத் திருட்டுப் பிரதி என்கிறார்கள். உண்மையான புத்தகத்திற்கும் இதற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் சைன்ஸ் அண்டு டெக்னாலஜி என்ற புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். புதிதாகப் படிக்க வருபவர்கள் அந்த ஆண்டுத் தேர்வை எதிர்கொள்ள அதன் அப்டேட்டடு லேட்டஸ்ட் வெர்ஷன் புத்தகத்தைத்தான் விரும்புவார்கள். முன்பு படித்த மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கினால் லேட்டஸ்ட் சிலபஸ் கவராகாது. போட்டித்தேர்வோ நுழைவுத் தேர்வோ கரண்ட்டோடு தொடர்புடையது என்பதால் புதிய வெர்ஷனைத் தேடுவார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவும் செய்யவும் முடியாது. மூர் மார்க்கெட்டை நாடினால் நமக்குப் புது அட்டையில் பாதி விலைக்குப் புத்தகங்கள் கிடைத்துவிடும். புதிய புத்தகத்தின் அட்டையையும் எடிஷன் பக்கத்தையும் புதிதாக உள்ளதை எடுத்து மாற்றி வைத்துவிடுவார்கள். புதுப் புத்தகத்தோடு ஒப்பிட்டு பார்க்காத வரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. கடைசிச் சில பக்கங்கள்தான் சேர்ந்திருக்கும்.
Add Comment